நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவினல இணைவுள்ளதாகத் தகவல் வெளியாவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக நடிகர் ராதாரவி, சுரேஷ், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பாஜக கட்சியில் இணைந்தனர். அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.
இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைவுள்ளதாகவும் அவருக்கு பாஜகதுணைத்தலைவர் அண்ணாமலை போன்று முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. ஆனால் இந்தத் தகவலை வனிதா விஜயகுமார் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.
ஏற்கனவே ஒரு பிரபல நடிகையாக வனிதா விஜயகுமார் மக்களிடம் அறிமுகம் ஆகியிருந்தாலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் மேலும் அவரது முகத்தை பிரபலமாக்கியது. மக்களிடன் நெருக்கமாக்கியது. அவருக்கு ரசிகர்களும் குவிந்தனர்.
இதையடுத்து வனிதா விஜயகுமார் தனியாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு கிராபிக்ஸ் எடிட்டரும் இயக்குநருமான பீட்டர் பாலை அவர் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதும் அதற்கு பலரும் அவருக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து தமிழகத்தில் பேசு பொருளானது.
இந்நிலையில் அவர் தனக்கு ஒரு பாதுகாப்புத்துணை வேண்டி செய்துகொண்ட மூன்றாவது திருமணம் வாழ்க்கை முறிந்துவிட்டதாக அவரே வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.




