பொழுதுபோக்கு துறையில் தவிர்க்க முடியாத உயரத்தை எட்டியிருக்கிறது டிஜிட்டல் மீடியா. இதற்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டிஜிட்டல் மீடியாக்களின் வர்த்தகமும் தமிழ்நாட்டில் விரிவடைய துவங்கியுள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் அதில் மட்டுமே காணமுடிகிற வெப் சீரிஸ்கள். முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், பிரபல நடிகர்கள் மட்டுமின்றி இயக்குனர்களும் வெப் சீரிஸ்களில் களமிறங்கி வரும் நிலையில், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக விளங்கும் இயக்குனர் மணிரத்னமும் வெப் சீரிஸில் களமிறங்ககியுள்ளார்.
வெப் சீரிஸின் தன்மைக்கு ஏற்றவாறு மிக பெரிய பட்டாளத்துத்துடன் கைகோர்த்திருக்கிறார்.
மனித உணர்வுகளான வெட்கம்,வீரம், கருணை, ஆச்சரியம், சிரிப்பு, பயம், அருவருப்பு, கோபம், அமைதி ஆகிய நவரசங்களையும் மையமாக கொண்டு 9 கதைகள் உருவாக்க பட்டு அதற்கு ” நவரசா “என்று பெயரிடப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“180” பட இயக்குனர் ஜெயேந்திரா இயக்கத்தில் சூர்யாவும், மணிரத்னத்திடம் பணியாற்றிய பிஜாய் நம்பியார், சுதா கொங்கரா இயக்கத்தில் முறையே விஜய் சேதுபதி மற்றும் ஜீ. வி. பிரகாஷ் நடிக்கயிருக்கின்றனர். மற்ற கதைகளை இயக்குவதற்காக கே. வி. ஆனந்த், கௌதம் மேனன், இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர்கள் அரவிந்த் சாமி, சித்தார்த் ஆகியோர் இயக்குனர்களாக அறிமுகமாகின்றனர். மணிரத்னம் இயக்கயிருக்கும் பகுதிக்கு மட்டும் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
“நவரசா” தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளி வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.