பிரபலமில்லாத நபர்களை ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் அடைத்து வைத்து, அவரது குண, நலன்களை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பித்து ஒருவாரமான நிலையிலேயே, போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் நமீதாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடைசியாக நமீதாவிற்கும், தாமரைச் செல்விக்கும் இடையே பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த சண்டை தகராறாத மாறியுள்ளது.
இதில் தாக்கப்பட்ட நமீதா ரத்த காயங்களுடன் வெளியேற்றப்பட்டதாகவும், முதலில் பூந்தமல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வேறொரு தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரும் விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில்
நமீதாவை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




