இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் வித்தியாசமான கெட்-அப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன்-2 பட ஷூட்டிங் கொரோனா பரவலால் பல மாதங்களாக நடைபெறவில்லை. இதனால் தற்போது அவர் பிக்பாஸ் தொலைக்காட்சி தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232-வது படமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் ஹீரோயின் மற்றும் இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது தளபதி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.




