அரசனும் வேந்தனும் நண்பர்கள் இவர்கள் பத்தாம் வகுப்பு முதல் இளங்கலை பட்டப்படிப்பு (B.A) வரை ஒன்றாக படித்து வந்தனர் பின்னர் இருவரும் வேறு வேறு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து முடித்தவுடன் வேந்தன் என்பவன் முதுகலை M.A பட்டப்படிப்பு பயில சென்னை செல்கிறான். அங்கு அவனுக்கு நல்ல பல்கலைகழகத்தில் இடம் கிடைத்து படிக்கின்றான். அரசன் என்பவன் குடும்ப சூழல் காரணமாக வெளியில் சென்று அவனால் படிக்க முடியவில்லை அவன் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ள காரணத்தினால் M.A படிக்க முடியவில்லை பின்னர் அவன் செல்போன் விற்கும் கடைகளில் சென்று வேலைசெய்கிறான்.
இருப்பினும் அரசனுக்கு கல்வியில் உள்ள ஆர்வத்தின் காரணமாக தொலைத்தூர கல்வியில் M.A படிப்பை வேலை செய்து கொண்டே தொடர்ந்தான்.
வேந்தன் என்பவன் சென்னையில் பல பேராசிரியர்களின் தொடர்பு கிடைத்தது படிப்பை அவர்களின் உதவியினால் படித்து வந்தான்.
அரசன் வீட்டில் ஒரே மகன் என்பதால் வயதான அம்மா அப்பாவை பார்த்துக் கொண்டு வேலைசெய்துக் கொண்டும் இடையில் படித்துக் கொண்டும் வந்தான்.
அரசனும் வேந்தனும் வேறு வேறு ஊர்களில் படிப்பதால் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது. வேந்தன் என்பவன் M.A முடித்துவிட்டு Mphil- (ஆய்வில் நிறைஞர்) என்றும் படிப்பை தொடர்ந்தான். அரசன் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே அரசு போட்டித் தேர்வுக்கு படித்து வந்தான்.
வேந்தன் ஆய்வில் நிறைஞர் படிப்பை படித்து கொண்டு இருக்கும்போது (UGC) பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் பேராசிரியர் தகுதி தேர்வு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வில் வெற்றி பெற்று விட்டான்.
இந்த தேர்வை வெற்றி பெற்று விட்டதால் ஐந்து ஆண்டுகள் (Ph.D) முனைவர் பட்ட படிப்புவரை அவனுக்கு மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு நல்ல படியாக வாழ்ந்து வந்தான்.
இதனை சில மாதங்கள் கழித்து ‘நாதன்’ என்னும் BA-வில் படித்த ஒருவன் அரசனிடம் இதுபோல வேந்தன் ஏதோ ஒரு தேர்வில் வெற்றி பெற்று விட்டானாம் அவனுக்கு மாதம் மாதம் உதவித்தொகை கிடைக்குமாம் என்றான்.
இதனை அறிந்த அரசன் மிகவும் சந்தோஷம் அடைந்தான். பின்னர் வேந்தனுக்கு போன் செய்து வாழ்த்தினான்.
பின்னர் அரசன் வேந்தனிடம் அது என்ன தேர்வு அதை எப்படி எழுதலாம் என்று கேட்டான். அதற்கு வேந்தன் பின்னர் சொல்கிறேன் என்று சொல்லி போன் வைத்து விட்டான். ஏன் என்றால் அரசன் கிராமபுற பகுதியில் படிக்கிறான் அவனுக்கு இது போன்ற தேர்வு முறை தெரியாது. வேந்தன் நகர் புறத்தில் படித்ததால் அவனுக்கு அங்கே நூலக வசதி பல பேராசிரியர் மற்றும் அறிஞர்களில் வழிகாட்டுதல் போன்றவை கிடைத்தது.
அதுமட்டும் இல்லாமல் இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி போன்றவை அளிக்கப்படுகினறது.
ஆனால் அரசன் வசிக்கும் கிராமபுறத்தில் இது போன்ற எந்த வசதியும் இல்லை பின்னர் அந்த தேர்வுக்கான தகவல்களை அரசன் தேட ஆரம்பித்தான். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இந்த தேர்வை பற்றி கேட்டு படிக்க ஆரம்பித்தான். பின்னர் தேர்வு வந்தது தேர்வில் தோல்வி அடைகின்றான். மறுபடியும் மறுபடியும் தேர்வில் தோல்வி அடைகின்றான்.
வேந்தனிடம் மீண்டும் போன் செய்து இந்த தேர்வில் வெற்றியடைய ஒரு ஐடியா கொடு என்று கேட்கின்றான். அதற்கு அவன் இதை எல்லாம் உன்னால் பாஸ் பன்ன முடியாது என்று கூறுகின்றான். அரசன் அதற்கு பராவாயில்லை நீ எந்தமாதிரியான புத்தகத்தை படித்தாய் என கேட்டான். அவன் அதற்கு ஏதோ ஒன்று இரண்டு புத்தகங்களை கடமைக்கு சொன்னான்.
அரசனோ அதை நம்பாமல் தன் முயற்சியால் தீவிரமாக அந்த தேர்வுக்காக படிக்கிறான். நான்காவது முறை கடின முயற்சியால் வெற்றி அடைகிறான். இதை வேந்தனிடம் சொல்கிறான். அதற்கு அவன் மகிழ்ச்சி அடைகிறான்.
அரசன் அவனிடம் நண்பா இப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்று வேந்தனிடம் கேட்கிறான். அதற்கு அவன் இந்த வெற்றிச் சான்றிதழ் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் அதற்குள் ஏதாவது ஒரு கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக (Phd) சேர வேண்டும் என்று கூறினான்.
பின்னர் அரசன் அவன் ஊரில் அருகில் உள்ள கல்லூரிகளில் தேடி தேடி அலைகின்றான். இப்போது Phd- சீட் இல்லை என்று சொல்லி விடுகின்றனர்.
பல நண்பர்களிடம் விசாரித்து பார்க்கின்றான் Phd- சீட் எங்கே கிடைக்கும் என்று அதற்கு அவர்கள் இங்கே எல்லாம் சேராதே சென்னை போன்ற சிட்டி இடங்களில் சென்று படி அங்கே தான் உனக்கு Knowledge கிடைக்கும் பல அறிஞர்கள் பேராசிரியர்கள் இணைப்பு கிடைக்கும் அதுமட்டும் இல்லாமல் உதவித்தொகைக்கான விண்ணப்பிக்கும் முறையை அறிந்துக்கொள்ளலாம் உதவிதொகையும் சரியான முறையில் கிடைக்கும். நீ வேந்தனிடம் கேளு அவேன் சரியான கல்லூரியில் சேர்ப்பான் என்று கூறுகின்றனர். அரசனும் வேந்தனுக்கு போன் செய்து சென்னை கல்லூரிகளில் Phd- சீட் கிடைக்குமா என்று கேட்கிறான். அதற்கு அவன் சென்னையில் Phd- சேர்ந்தால் ரொம்ப கடினம் என்று கூறுகிறான். அதற்கு அரசன் பராவாயில்லை நான் சென்னையில் படிக்கிறேன் என்று தெரிவித்தான் பின்னர் யோசனை செய்தவாறே சரி கேட்டு சொல்கிறேன் என்று கூறினான்.
பின்னர் ஒரு வாரம் ஆகின்றதே இன்னும எந்த தகவலும் சொல்லவில்லையே வேந்தன் போன் செய்யவில்லையே என்று வேந்தனுக்கு அரசன் போன் செய்கிறான். வேந்தன் போன் எடுக்கவில்லை.
சரி வேந்தன் வேலையாக இருப்பான் போல பின்னர் போன் செய்வான் என்று காத்துக்கொண்டு இருந்தான். ஒரு மாதம் இரண்டு மாதங்களும் பின்னர் மூன்று மாதங்களும் இப்படியே ஒன்றரையாண்டுகள் கழிந்தது. வேந்தன் போன் எடுக்கவில்லை என்ன செய்வது என்று புரியாமல் அரசன் தவித்துக்கொண்டு இருக்கிறான்.
ஏன் என்றால் வேந்தனை நம்பி நம்பி ஒன்றரை ஆண்டுகள் கழிந்தது இன்னும் ஆறுமாதத்திற்குள் Phd- சேர்ந்தே ஆக வேண்டும் அப்படி இல்லை என்றால் Phd- உதவித்தொகை கிடைக்காது.
அரசனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வேந்தனுடன் சென்னையில் படித்த சுதன் என்னும் நண்பரிடம் வேந்தன் தங்கியுள்ள ஆஸ்டல் விலாசத்தை கேட்டு அரசன் சென்னைக்கு தனியாக முதல் முறை செல்கிறான்.
ஒருவழியாக சென்னைக்கு அரசன் வந்து விடுகிறான். பிறகு விடுதி விலாசத்தை விசாரித்துக் கொண்டு விடுதியை வந்து சேருகின்றான்.
அங்கு வேந்தன் தங்கியுள்ள அறை எது அங்கே தங்கயுள்ள மாணவர் ஒருவரிடம் விசாரிக்கிறான். அதற்கு அந்த மாணவன் வேந்தன் முதல் மாடியில் நான்காம் அறையில் தங்கியுள்ளார் என்று சொல்கிறான். அந்த மாணவருக்கு நன்றி தெரிவித்து விட்டு முதல் மாடி நான்காம் அறைக்கு செல்கிறான். அப்போது அரசன் முதல் மாடி நான்காம் அறை அருகே செல்கிறான் உள்ளே இருந்த வேந்தனும் அவன் உடன் இருந்த அவன் நண்பனும் பேசிக்கொண்டு இருப்பதை அரசன் வரும் போது ஜன்னல் ஓரமாக அரசனுக்கு தற்செயலாக கேட்கின்றது.
அப்போது வேந்தன் அவன் நண்பனிடம் அரசன் என்னும் ஒருவன் என்னை தேடிக் கொண்டு வருவான். அவனிடம் நான் இல்லை என்று சொல்லி விடு என்று கூறினான்.ஏன் என்று அவன் கேட்க அதற்கு வேந்தன் நான் கக்ஷ்டப்பட்டு UGC – தேர்வில் பாஸ் பண்ணினேன் நல்ல காலேஜ் தேர்ந்தெடுத்து படித்தேன். ஆனால் அவனுக்கு ஈஸியாக காலேஜ் சேர்வதை பற்றி சொல்லனுமாம். போடா என்று நண்பனிடம் கூறுகின்றான். அதற்கு அவன் தெரியவில்லை என்று தானே உன்னிடம் கேட்கிறான் உதவி செய்தால் என்ன என்று கூறுகிறான். அதற்கு அவன் என்னால் முடியாது போடா என்று கூறுகின்றான்.
இதனை கேட்ட அரசன் மனம் நொறுங்கி போனான். பின்னர் அப்படியே திரும்பி வந்து விடுகிறான். ஒரு டீ கடையில் சென்று டீ குடித்துக் கொண்டே யோசனை செய்கிறான். நாம் வீட்டுக்கு சென்றுவிடுவோம். வேந்தன் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லையே என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறான். அப்போது அவனுக்கு எதிரில் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அந்த பள்ளிக்கூட சுவற்றில்
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்“.
என்னும் திருக்குறள் எழுதியிருப்பதை படித்தான் இந்த திருக்குறளை படித்தவுடன் எப்படியாவது நாமே முயற்சி செய்து கல்லூரியில் சேர வேண்டும் என்று முடிவு எடுக்கிறான். சென்னையில் ஒவ்வொரு கல்லூரியாக விலாசம் கேட்டு கேட்டு அவனே செல்கிறான். ஒவ்வொரு கல்லூரிகளிலும் சென்று சென்று திரும்புகிறான்.
இப்போதைக்கு Phd- சீட் இல்லை நேத்து தான் சீட் புல் ஆகிடுச்சி போன வாரம் தான் புல் ஆகிடுச்சி என்று சொல்கின்றார்கள். பின்னர் இறுதியாக ஒரு கல்லூரிக்கு செல்கின்றான். அங்கே சீட் கிடைத்து விடுகின்றது. அடுத்த வாரம் வந்து சேர்ந்து கொள்ளுமாறு கூறுகின்றனர்.
அரசன் சந்தோக்ஷமாக செல்கிறான் தன் ஊருக்கு பஸ் ஏற பாஸ் ஸ்டேசனில் நின்றுக் கொண்டு இருக்கிறான். அப்பொழுது வேந்தனை கேட்டது நம்மலே தேடி இருந்தால் எப்போதோ கல்லூரியில் சேர்ந்து இருக்கலாம் போல என்று நினைத்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது பின்னாடி இருந்து குரல் அரசன் அண்ணா என்று திரும்பி பார்த்தால் தன்னுடன் கல்லூரியில் படித்த ஜீனியர் மாணவன் மணி என்னடா மணி இங்கே என்றான். அண்ணா இங்கே Phd- சேர வந்துள்ளேன். உங்களுக்கு தெரிந்த கல்லூரி இருந்தா சொல்லுங்கள் என்று கூறினான் மணி. அதற்கு அரசன் நான் கூட இப்போது தான் Phd சேர்ந்து வந்துள்ளேன். அந்த கல்லூரியில் இன்னும் ஒரு சீட் காலியாக உள்ளது நீ போய் சேர பாரு என்று கூறினான். நன்றி அண்ணா என்று கூறி முதலில் நான் கல்லூரிக்கு போய் பார்க்கிறேன் என்று கூறினான் மணி.
அரசன் போய் பாரு அதற்கு என்று இந்த ஒரு கல்லூரியையே நம்பாதே பல கல்லூரியில் போய் பாரு நான் சொல்லி விட்டேன் என்று என்னையே நம்பாதே எனக்குள்ளேயே திடீர் என்று நம்பல விட ஜீனியர் பையன் நம்ம கூட ஒன்னா Phd- படிக்கிறதா என்று எண்ணம் உருவாகலாம் அதனால யார் சொன்னாலும் நீயும் முயற்சி பன்னனும் என்று சொல்கிறான். நானும் இப்ப தான் ஒருவனை நம்பி ஒன்றரை வருடம் வீணாகி போய்விட்டது. நீ யாரையும் நம்பாதே உன் முயற்சியை நீ செய் அதுதான் வெற்றியை கொடுக்கும் என்று பேசிக்கொண்டு இருந்தான். அரசனுக்கு பஸ் வந்துவிட்டது சரி தம்பி எனக்கு பஸ் வந்து விட்டது. நான் புறப்படுகிறேன் என்று சொல்லி தன் ஊருக்கு செல்கிறான் அரசன்.!நன்றி!