Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

சாமி

September 8, 2020
– லட்சுமி சங்கரன்

“கோவாலு! எந்திரிலே. அடே! நாசமாப் போறவனே! ஏந்திரிடா.”

பாவம் கோவாலு. ஆத்தா கூப்பாடு போட்டது அவன் காதில் விழவேயில்லை. அவன் வயது அப்படி. படுத்தால் உறங்கிவிடுவான். சலனமில்லாமல் தூங்குவான்.

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

மாரியம்மாவுக்கு எரிச்சலாக இருந்தது. பானையிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, மகன் முகத்தில் அடித்தாள்.

“ஏந்திரிடா பொறம்போக்கு.”

வாரிச் சுருட்டிக்கொண்டு, கண்ணைப் பிசைந்துகொண்டு எழுந்தான். அதற்குள்ளா பொழுது விடிந்துவிட்டது. இப்போது தான் படுத்த மாதிரி இருந்தது.

“ஏ நாசமாப் போறவனே! மலங்க மலங்க முளிக்காத. போய்ப் பல்ல வெளக்கிக்கினு வெரசா வா.”

பல் தேய்த்து விட்டு வந்தவனுக்கு ஒரேயொரு இட்லி கொடுத்தாள்.

‘உம். சட்டுனு துன்னுப் போட்டு, சட்டினித் தூக்கயும், எலக்கட்டையும் எடுத்துக்க. பொஸ்தகப் பைய மறந்துடாதே.”

இட்லி வியாபாரம் முடிந்தவுடன் பள்ளிக்கூடம் போவான். அங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மாலை வீட்டுக்கு வருவான். அவன் வயது பத்தானாலும், 3-ஆம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் எதுவும் புரியவில்லை. வீட்டில் கவனிப்பாரும் இல்லை.

அவன் நயினா கன்னியப்பன், பஸ் ஸ்டேண்ட் டீக்கடையில் எடுபிடி வேலை செய்துக் கொண்டிருந்தான். சாப்பாட்டுக்குப் பணம் கொடுப்பான். டீக்கடையில் மீந்த வடை, நமுத்துப் போன புரை  போன்றவற்றையும், அவ்வப்பொழுது கொண்டு வருவான்.

“ராத்திரில இப்போ கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட்ல நடமாட்டம் சாஸ்தியாயிருக்கு. பக்கத்துல கும்மோணத்துல கோயில்ல எதுனாச்சும் நடந்தா, ராவு முச்சூடும் வண்டி வந்துகினு போய்க்கினு இருக்குது. டீக்கடைல வியாவாரம் நல்லா நடக்குது.. மொதலாளி ராவுல இருக்க சொல்லுறாரு. ஒன்னு ரெண்டு கூடத் தராறு” என்றான்.

அப்படிப்பட்ட நாட்களில் இரவு வீட்டுக்கு வரமாட்டான். யாரிடமாவது சேதி சொல்லி அனுப்புவான்.

இப்படித்தான் அவன் ஒரு நாள் இரவு வீட்டுக்கு வரவில்லை. மறுநாளும் ஆள் தலையைக் காட்டவில்லை.

பஸ் ஸ்டேண்ட் பக்கம் போனாள் மாரியம்மா. கன்னியப்பன் எங்கே? என்றவளைப் பார்த்து, “அதையேதா நானும் ஒன்னக் கேக்கறேன்” என்றான் டீக்கடைக்காரன். அப்புறம் அங்கேயிங்கே விசாரித்ததில் தெரிய வந்தது, கொய்யாப் பழம் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்த சரோசாவுடன், எங்கோ போய்விட்டான் என்பது.

அப்புறம் தினமும் வட்டிக் கட்டவேண்டும் என்ற அநியாயக் கட்டளையுடன் பணம் கடன் வாங்கிக் கோவில் அருகில், கடை வீதியில் இட்லி விற்க ஆரம்பித்தாள். ஒரு வேளைக் கஞ்சி குடிக்க முடிந்தது.

சாக்கை விரித்து, இட்லித் தூக்கைக் கீழே வைத்தாள். பக்கத்திலேயே கோவாலு இலைக் கட்டையும், சட்னித் தூக்கையும் வைத்தான். “டேய் கோவாலு எடத்தப் பாத்துக்க. விட்டுடாதே. நா போய் ஒரு கொடம் தண்னி கொண்டாறேன்” என்று போனாள்.

கோவிலில் வருடாந்திர விழா நடந்துக் கொண்டிருந்தது. வருவோர் போவோர் கூட்டம் அதிகமாயிருந்தது.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கோவாலு. ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினான். மாடு ஒன்று இலைக்கட்டைத் தின்று கொண்டிருந்தது.

நல்ல முரட்டுக் காளையாயிருந்தது. பயமாயிருந்தது. இருந்தாலும், “தே, தே ,போ” என்று விரட்டப் பார்த்தான். அது இலைக்கட்டை இழுத்துக் கொண்டு போய்விட்டது.

திக் பிரமையுடன் கோவாலு நின்று கொண்டிருந்தான்…

ப்ளாஸ்டிக் குட நீருடன் வந்துவிட்டாள் மாரியம்மா. “எலே, ஒன்ன ஜாமானப் பாத்துக்கன்னா இப்டியா மாடு, எலயத் திங்கவிடுவ?” இரண்டு அடி வைத்தாள்.

மெயின் ரோட்டாண்ட போய் எல கெடைக்குதானு பாத்தாறேன். ஓட்டமும் நடையுமாக அங்கிருந்த காய்கறிக் கடைக்கு வந்தாள். அவனிடம் இலைக்கட்டு இல்லை. “லாரியொண்ணும் இன்னிக்கு வரல. ஏதோ ஸ்ட்ரைக் போல” என்றான்.

பக்கத்தில் பெரிய பந்தல் போட்டிருந்தது. நாட்டாமைக்காரர் வீட்டில் அன்று அன்னதானம் செய்கிறார்கள் என்று  கேள்விப்பட்டிருந்தாள். பந்தல் வாசலில் பூ, பழம், இலை, அரிசி, பருப்பு என்று சாமான்கள் வேன்களிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன. ஏற்பாடு செய்பவர்கள் அங்குமிங்கும் வேலையாய்ப் பறந்துக் கொண்டிருந்தார்கள்.

விரைவாக அங்கே போனாள். முதலில் இவள் சாப்பாடு கேட்பதாக நினைத்துக் கொண்டவர்கள் “மதியம் ஒரு மணிக்குத்தான் சாப்பாடு, போம்மா” என்றார்கள். எப்படியோ முண்டியடித்துச் சாமான் இறங்குவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஆளிடம் போய், “ஐயா, எனக்கொரு எலக்கட்டு கொடுங்கய்யா. கைல இப்பக் காசில்ல. 10 மணிக்கு இட்லி வியாவாரம் முடிஞ்சு கொண்டாறேன்” என்றாள்.

இவள் சொல்வதைப் புரிந்துகொள்ளச் சில கணங்கள் பிடித்தது அவனுக்கு. “எலையெல்லாம் கெடையாதும்மா. லாரி ஸ்ட்ரைக் தெரியுமில்ல? நாட்டாமைக்காரர் யார் யார் கிட்டியோ சொல்லி, ப்ரைவேட்டு வேன்ல வந்து எறங்குது சாமானெல்லாம். எடத்தக் காலி பண்ணு” என்று சிடுசிடுத்தான்.

சலிப்புடனும், கோவத்துடனும் இட்லிக் கடைப் பக்கம் திரும்பி வந்தவள், அங்கே நின்றுக் கொண்டிருந்த கோவாலுவின் முடியைப் பிடித்து உலுக்கி, அடிக்கத் தொடங்கினாள்.

“ஏய்! நிறுத்து. இன்னா நீ புள்ளிய அடிச்சே கொன்னுடுவ போலருக்கே?”

“யாரது?” திரும்பினாள்.

பீடி பிடித்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தான் கதிர்வேலு. அவன் இதே கடை வீதியில், மதியம் பட்டை சோறு விற்பவன். அவனை ரவுடி என்றார்கள். அவன் சாமி இல்லை என்று சொல்லுவான். கோவிலுக்குப் போகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்வான். ஒரு பாக்கெட் பிரியாணியும், கள்ளச் சாராயமும் கொடுத்தால், அரசியல் கூட்டத்தில் கோஷம் போடப் போவார்கள், அவனும் அவன் சகாக்களும்..

அவனைப் பார்த்தாலே பயந்து சாவாள் மாரியம்மா.

அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் வெடித்தாள்.

“உனிக்கு இன்னாய்யா தெரியும்? நா பெத்த சனியன் வேடிக்க பாத்துகினு நிக்க சொல, காள மாடு எலக் கட்ட கடிச்சு, இஸ்துகினு போய்டுச்சு. கஸ்டமருக்கு நா எதுல இட்லி வச்சுக் கொடுக்க? இன்னிக்கு லாரி வேற வராதுன்னுட்டாங்க. எந்தக் கடீலயும் எல இல்ல.”

அதுக்காவப் புள்ளயப் போட்டு அந்த மொத்து மொத்துறியே?. இன்னிக்கு எலவசமா சோறுபோடப் போறாங்கல்ல. எங்கிட்ட எவனும் பட்ட சோறு வாங்கித் துண்ண வரமாட்டான்.. புள்ளிய அனுப்பு. மந்தார எலக்கட்டுத் தாரேன்”

மாரியம்மாவுக்கு அப்பாடா என்றிருந்தது. “நீ அந்தச் சாமி புண்யத்துல நல்லாருக்கணும்யா” என்றாள்.

“தே! சாமி, கீமின்னு எங்கிட்ட பேசின, அப்பால எனக்குக் கெட்ட கோவம் வந்துடும்.. சரி. சரி. வாடா கோவாலு எங்கூட” என்றான் கதிர்வேலு.

ஓர் ஏழைக்குத்தான் இன்னொரு ஏழையின் கஷ்டம் புரியுமோ? இதைத்தான் சாமி என்கிறார்களா? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

– கதைப் படிக்கலாம் – 8

இதையும் படியுங்கள் : கல் உருண்டை!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும்- ஏ.ஐ.சி.டி.இ எச்சரிக்கை

Next Post

70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்…

Next Post

70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version