Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர் ஹோஸ்டஸ் பேயும்!!

September 14, 2020
– ராம் ஸ்ரீதர் 

அவசரமாக அலுவலக வேலை நிமித்தம், நியூயார்க் செல்ல வேண்டும் என அம்மாவிடம் சொன்னபோது ஆரம்பித்தது வினை.

“டே… கண்ணா, அம்மா அமெரிக்கா போனதே இல்லடா, கூட்டிண்டு போடா,” என்றாள்.

துரை வைகோவின் கோரிக்கையை ஏற்ற ஏர் இந்தியா!

பிரபல காமெடி நடிகர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!!

“என்னமா, நியூயார்க் என்ன பாம்பே, டெல்லினா நெனச்ச… போறதுக்கு, ஏகப்பட்ட செலவு ஆகும்மா” என்றேன்.

அம்மா நொடித்துக் கொண்டாள். “நீ நெனச்சா முடியும், போறது போ,” என்றாள்.

தனக்கென எதுவுமே வேண்டுமென, அம்மா அதுவரை கேட்டதில்லை. எனவே அம்மாவின் அந்தக் குழந்தைத்தனமான வேண்டுகோளைத் தட்டுவதற்கு என் மனம் கேட்காமல், அம்மாவையும் கூட்டிக்கொண்டு யு.எஸ். செல்ல ஆயத்தமானேன்.

ஒரு அதிகாலைப் பொழுதில் விமானத்தில் ஏறிவிட்டோம்.

திடீரென அம்மா என்னை எழுப்பி, “விடிஞ்சாச்சுடா, டாய்லட் போய்ட்டு, பல் தேச்சுண்டு வா, காஃபி தரேன்,” என்ற அம்மாவை… என்ன சொல்லுவது என்று புரியவில்லை.

“அம்மா, அதெல்லாம், இறங்கினதுக்கு அப்புறம் பாத்துக்கலாம், அப்புறம் இவா தர்ற காஃபி, பூனை மூத்திரம் மாதிரி இருக்கும், அதையெல்லாம் ட்ரை பண்ணவேண்டாம்” என்று சொல்லிவிட்டு, மறுபடியும்  கண்ணயர்ந்தேன்.

விமானத்தினுள் பிரேக்ஃபாஸ்ட் அறிவிப்பு வந்து, வண்டியைத் தள்ளிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

“இது என்ன கிரகச்சாரம்டா, பல்லே தேக்கல, அதுக்குள்ள டிஃபன் !” என்று அலுத்துக்கொண்டாள் அம்மா.

“அம்மா, உனக்கு நெக்ஸியம் மாத்திரை கொண்டுவந்தாயா??” என நான் கேட்டேன், அம்மா இல்லை எனத் தலையை ஆட்டினாள்.

சட், என்ன ஒரு முட்டாள்தனம்! அம்மாவுக்கு வயிற்றில் அஸிடிட்டி பிரச்சனை இருக்கிறது. நேரத்திற்கு சாப்பிட்டால் கூட, சிலசமயம் படுத்தி எடுத்துவிடும்.

அருகிலிருந்த பணிப்பெண்ணை அழைத்து, “பிரேக்ஃபாஸ்ட் அப்புறம்,  முதலில் எனக்கு ஒரு நெக்ஸியம் கொண்டு வருகிறீர்களா?” என்றுக் கேட்டேன்.

பணிப்பெண் , “லெட் மி செக்” என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்தாள். சிறிது நேரம் கழித்துத் திரும்பி, “ஸாரி சார், நோ ஸச் மெடிஸின் வித் அஸ்” என்றாள், குரலில் வருத்தமே இல்லாமல்.

நொந்துக் கொண்டேன். என்ன ஒரு முட்டாள் நான், விமானம் தரையிறங்கும் வரை, எதுவும் பிரச்சனை வராத வரை… சரி.

நான் மெதுவாக, “அம்மா, காலை ஏதாவது சாப்பிடு. பழம் கிடைக்கும் வாங்கித் தருகிறேன்,” என்றேன். நெக்ஸியம் இல்லாதக் குறையை மறைக்க முயன்றேன்.

காலை உணவாக, வெண்ணெய் தடவிய ரொட்டி, பழம், காஃபி என எல்லாம் முடிந்தது. அம்மா தன்னிடமிருந்த, லலிதா ஸஹஸ்ரநாம புத்தகத்தில் ஆழ்ந்தாள். நான் FORBES இதழைப் புரட்டினேன். டெஸ்லாவின் மஹாத்மியங்களுக்கு நடுவே, வேறு சில செய்திகளையும் பார்க்க முடிந்தது.

சிலமணிநேரம் கடந்து, ஃபிராங்ஃபர்ட் நெருங்கும் செய்தியை பைலட் வெளியிட்டு, விமானம் மூன்று மணிநேரம் அங்கிருக்கும் என்ற செய்தியைச் சொல்லி, வயிற்றில் பால் வார்த்தார்.

ஃபிராங்ஃபர்ட் விமானநிலையம் பெரிய, நவீன நிறுத்தம் என்பதால்… நெக்ஸியம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஃபிராங்ஃபர்ட்டில் விமானம் தரையிறங்கிய போது, வெளியே நல்ல மழை. அம்மாவை வி.ஐ.பி. லௌஞ்சில் உட்காரவைத்துவிட்டு, ஃபார்மஸியைத் தேடினேன்.

அதோ, 24 HOURS என்றப் பெயரில் ஒரு பச்சை போர்டு ஒளிர்ந்தது. கௌண்டரில் இருந்த பெண், ஆங்கிலம் நன்றாகவே பேசினாள், “எஸ் ஸார், ஹவ் மே ஐ ஹெல்ப் யூ?” என்றாள்.

அவளிடம் நெக்ஸியம் வேண்டுமென்றேன். “ஸாரி, அதைப்போன்ற மருந்துகள், ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தரமுடியாது,” என்றாள், மிகத் தீர்மானமாக.

நொந்துபோய் அம்மா அமர்ந்திருக்கும் இடம் திரும்பினேன். அம்மா டி.வி.யில் பொம்மை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இரண்டு, மூன்று கடைகளில் செக் செஞ்சாச்சு அம்மா, நெக்ஸியம் கெடைக்கல.” என்று அபத்தமாகப் புளுகினேன்.

உள்ளுக்குள் நியூயார்க் சென்றடையும் வரை, எந்த விதமான பிரச்சனையும் வரக்கூடாதே என்று, ஒரு ஐஸ் கத்தி என் நெஞ்சில் சொருகிக் கொண்டிருந்தது.

விமானம் ஃபிராங்ஃபர்ட் நகரின் மேலே சென்றுக் கொண்டிருந்த போது, மிக மெதுவான குரலில், அம்மா தன் நெஞ்சில் ஒரு குத்து வலி இருக்கிறது என்று சொன்னாள். உடனே, பணிப்பெண்ணை அழைத்து, பயணிகளில் யாராவது டாக்டர்கள் இருப்பார்களா எனப் பார்க்கச் சொல்லி கெஞ்சினேன்.

விமானத்தின் உள்ளே அறிவிப்பு வந்தது. பின்னால் உள்ள இருக்கையில் இருந்த ஒரு பெண்மணி எழுந்து, தான் ஒரு நர்ஸ் என்றும், ஜான் ஹாப்கின்ஸ் ஹாஸ்பிடலில் 7 வருடங்களாகப் பணிபுரிபவர் என்றும் சொல்லிவிட்டு, தன்னால் உதவ முடியும் என்று சொன்னார். விமானப் பணிப்பெண் அந்த நர்ஸை எற இறங்கப் பார்த்துவிட்டு, “ஸாட்டிலைட் ஃபோனில் எங்கள் டாக்டரிடம் உதவிக் கேட்டுள்ளேன், அவர் என்ன சொல்கிறார் என்று பார்த்துவிட்டு, பிறகு உங்களை அழைக்கிறோம்,” என்றார்.

“டாக்டர் லைனில் இருக்கிறார், உங்கள் அம்மாவுக்கு என்ன செய்கிறது என்று கேட்கிறார்,” என்றாள், அந்தப் பணிப்பெண் என்னருகே வந்து.

“நெஞ்செரிச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு, ஒரு மாதிரியான அசதி,….” வரிசையாக அம்மாவின் உபாதைகளை ஒன்றொன்றாகச் சொல்ல ஆரம்பித்த என்னை இடைமறித்து, ” உங்கள் அம்மாவின் வயது என்ன என்று டாக்டர் கேட்கிறார்,” என்றாள்.

“அறுபத்தியொன்று” என்றேன்.

“டாக்டர், உங்கள் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் இருக்கலாம்,” என்கிறார்” என்றாள் அந்தப் பணிப்பெண், குரலில் எந்தவித உணர்வும் இல்லாமல்.

“அம்மாவுக்கு இருதய சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் இல்லை, நான் அந்த டாக்டரிடம் பேச முடியுமா?” என்றேன்.

“இல்லை, நான் எல்லாவற்றையும் விளக்கிவிட்டேன்,” என்றாள் அவள்.

“அந்த நர்ஸை வரச் சொல்லி பார்க்கலாமே,” என்றேன் கெஞ்சும் குரலில்.

“கொஞ்சம் தள்ளுங்கள்,” என்றார் அந்த நர்ஸ், கையில் அவர்கள் உபயோகிக்கும் கிட் இருந்தது. அவர் வந்ததையே கவனிக்காத நான், “ஸாரி” என்று வழிவிட்டேன்.

“BP நார்மல், பல்ஸ் நார்மல்” என்றார் அந்த நர்ஸ். பணிப்பெண்ணைப் பார்த்துவிட்டு, “இது நிச்சயம் ஹார்ட் அட்டாக் அல்ல.” என்றார் தீர்மானமான குரலில்.

“அது எனக்குத் தெரியாது, எங்களுக்கென சில சட்டத்திட்ட வழிமுறைகள் இருக்கின்றன. விமானம் இன்னும் சிறிது நேரத்தில் ஃபிராங்ஃபர்ட்டில் இறங்கிவிடும், அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உங்கள் அம்மாவை அழைத்துச் செல்வார்கள்.” என்றாள் அவள்.

நான் அதிர்ந்தேன். மறுபடியும் ஃபிராங்ஃபர்ட்டா?

விமானம் ஃபிராங்ஃபர்ட்டில், அவசரம் நிமித்தம் இறங்குவதாக பைலட் அறிவித்தார். பதினைந்து நிமிடங்களில் நின்றிருந்த விமானத்தினுள் இருவர் ஸ்ட்ரெச்சருடன் நுழைந்து, என் அம்மாவைக் கவர்ந்து சென்றார்கள். நான் பின்னால் ஓடினேன்.

அருகிலிருந்த ER (எமெர்ஜென்சி ரூம்) உள்ளே நுழைந்து, அம்மாவை உடனடியாக கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அரைமணி நேரம் ஆகி இருக்கும் , பியர்ஸ் ப்ராஸ்னன் போல, அழகான ஒரு இளம் வயது டாக்டர் என்னை நெருங்கினார்.

“ஐ’ம் டாக்டர் ஹான்ஸ், கவலைப்படாதீர்கள், உங்கள் அம்மாவுக்கு ஹார்ட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை, வயிற்றில்தான். ஒரு மருந்துக் கொடுத்துள்ளேன். எதற்கும் இதை கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு பட்டை மாத்திரைகளை என் கையில் திணித்தார்.

நெக்ஸியம் ……………

– கதைப் படிக்கலாம் – 34

இதையும் படியுங்கள் : ‘வண்டிக்காரம்மா…’

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது

Next Post

சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி !!

Next Post

சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி !!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version