தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இன்றே பதிவிறக்கம் செய்ய அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது அதன்படி இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகிறது
இத்தேர்வின் முடிவுகளை www.tndge1.tn.nic.in, www.tndge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையளத்திலிருந்து மாணவர்கள் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டவுள்ளது. இதோடு மாணவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றே தற்காலிகமாக மதிப்பெண் பட்டியல்களை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 21 வரை பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




