பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் என, அண்ணா பல்கலைக்கழககம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, லேப்டாப், செல்போன் அல்லது டேப் போன்றவற்றை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுக்கு முன்பு ஒருவாரத்திற்கு முனோ ஆன்லைனில் பயிற்சி தேர்வு நடத்தப்படும் என்றும், multiple choice question அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
மேலும், தேர்வு தொடர்பான விரிவான அட்டவணை மற்றும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.




