இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்டு மாதம் 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வில் 1.57 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கலந்தாய்வு இன்று முதல் நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது.