கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை என்ற அறிவிப்பால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இன்று முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ரசிகர்களை கவரும் விதமாக ஜவுளிக்கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ₹1க்கு புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட் மற்றும் பல்வேறு ஆபர்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அதிகாலை முதல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த ஜவுளிக்கடை முன்பு திரண்டனர். மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்டத்தை சமாளிக்க ஜவுளிக்கடை சார்பில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த அறிவிப்பால் கிருஷ்ணகிரி மாவட்டமே திருவிழா கோலம் பூண்டது.