எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வும் நடைபெற இருக்கிறது. அதன்படி, அரசு பள்ளிகளில் 75 சதவீதம் ஒதுக்கீடு அடிப்படியில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அருகில் நடைபெறுகிறது.
இதில் முதல் கட்டமாக 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் சுற்று கலந்தாய்வில் 150 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினந்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

வெளியூரில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளதாக மருத்துவ கல்வி இயக்கமானது தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கி நாளை வரை நடக்கவுள்ளது.




