தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 7 மாதங்களாக முடப்பட்டுள்ளன. இதனிடையே, நடப்பாண்டிற்கான மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டு முடிவுகளில் வெளிப்பட்டன.
அரசு அறிவிப்பை தொடர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர 38 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
மேலும் கலந்தாய்வுக்கான அட்டவணையையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அல்லது அடுத்த சில தினங்களில் கலந்தாய்வு தொடங்கலாம் என கூறபடுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அமல்படுத்துவதன் மூலம், நடப்பாண்டில் 395 அரசுப் பள்ளி மாணவர்கள் வாய்ப்பு பெறுவர் என கூறப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக, மாணவர்களின் நலன் கருதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், நாள் ஒன்றிற்கு 500 பேர் அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.