அசாமில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு தினமும் ரூ.100 ஊக்கத்தொகை தர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அசாம் :
பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாக நிதி உதவி வழங்கப்படும் என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
Read more – Dell நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
அதன்படி பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இந்த திட்டம் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.