கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் எட்டிகட்டி என்ற கிராமம் அருகே தனியார் பஸ் டிப்பர் லாரி மீது மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் கொண்ட பெண்கள் குழு தங்களது விடுமுறையை கழிக்க தனியார் பஸ்ஸில் கோவாவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியதில் பேருந்தில் இருந்த 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். பலர் பலத்த காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தார்வாட் புறநகர் காவல் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்கு தர்வாட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.