
மூன்றாவது கணவனுடன் மாயமான பெண்ணை சேர்த்துவைக்கக் கோரி, இரண்டு நபர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் மாவட்டத்திலுள்ள பரோசா பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், மாயமான தங்களுடைய மனைவியை சேர்த்துவைக்கக் கோரி போலீசில் புகாரளித்துள்ளனர். மாயமான பெண் முதல் கணவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மற்றொரு நபரை காதலித்துள்ளார். அவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து இருவரும் ஒன்றாக வாழந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு, இரண்டாவது நபரிடம் இருந்து புறப்பட்ட அந்த பெண் மாயமாகிவிட்டார். இதனால் பதறிப்போன இரண்டாவது கணவர், பெண்ணின் முதல் கணவரை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் தங்களுடைய மனைவி மற்றொரு நபருடன் சேர்ந்து வாழ்வது தெரியவந்தது. இதையடுத்து மனைவியை மூன்றாவது காதலரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என பரோஸோ பகுதி போலீசாரிடையே இரண்டு கணவர்களும் புகார் அளித்துள்ளனர்.