கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் ஆஷிஷ் குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகையை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசுகள் வழங்க வேண்டும். நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த நிதியுதவியை மாநில அரசுகள் குடும்பங்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, 4,47,194 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.




