ஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் கடந்த பின்பும், சட்டவிரோத பண பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, உணவுப்பொருள் பதுக்கல், ஆள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், கருப்புபணம், பினாமி சொத்து, வருமானத்துக்கு மீறிய சொத்து போன்ற வழக்குகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து பதிப்பாகி வருகிறது.
ஊழல் தடுப்பு சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தாத காரணத்தாலும், மாவட்ட நீதிமன்றகளில் தேங்கியுள்ள வழக்குகள் காரணமாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.
Read more – தொலைக்காட்சி நேரலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜோ பைடன்..
இதனால் ஊழல் தடுப்பு வழக்குகளை விரைவில் விசாரிக்க, மாவட்டந்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அஸ்வினிகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.