புதிய வாழ்க்கையை மற்றொரு ஆணுடன் தொடங்கிய பெண்ணை முன்னாள் கணவரின் குடும்பத்தினர் செய்த வெறி செயல் உருக வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் குணா மாவட்டத்தில் உள்ள சாகாய் மற்றும் பான்ஸ் கெடி கிராமங்களுக்கு இடையே கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்குடி பெண் ஒருவர் முன்னாள் கணவரின் குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்பட்டு உள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பழங்குடி பெண் போலீசில் அளித்த புகாரில் அவர் தனது கணவரிடமிருந்து பரஸ்பர ஒப்புதல் பிரிந்து விட்டதாகவும் தற்போது மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் வீட்டிற்கு வந்து தன்னை கடத்தி சென்று உறவினரால் ஒருவரை தனது தோள்பட்டை மீது ஏறி அமர வைத்து சுமார் மூன்று கிலோமீட்டர் நடக்க வைத்து அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் தோல்பட்டையில் ஒருவரின் சுமந்து நடந்து செல்ல பின்னால் ஒரு கும்பல் கட்டை மட்டும் பேட்டுடன் அவரை விரட்டி செல்கின்றனர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் மற்றும் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.