
பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள சினிமா நடிகை காவ்யா மாதவனிடம் காவல்துறையினரிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக் துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை பிரபல மலையாள சினிமா நடிகர் திலீப் மீது புகார் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் தேசியளவில் புயலை கிளப்பியது. நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் வெளியே வந்துள்ள் திலீப், தன் மீதான குற்றச்சாட்டுக்களை கலைக்க முயன்றதாக புகார் எழுந்தது. இதற்கு அவருடைய இரண்டாவது மனைவி காவ்யாவும் உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
நடிகர் திலீப்பின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அழிக்கப்பட்ட தகவல்கள், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்டது. இதையடுத்து சாட்சிகளை அழிக்க முயன்ற விவகாரத்தில் நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் வெளிநாட்டில் இருந்து கடந்த 11-ம் தேதி தான் சென்னை வந்துள்ளதாகவும், இன்று கொச்சிக்கு திரும்புவுள்ளதாகவும் நேற்று காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார். மேலும் கொச்சியிலுள்ள தன்னுடைய வீட்டில் வைத்து இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த போலீசார், ஆலுவாவில் உள்ள காவல்துறை கிளப் அலுவலகத்தில் இன்று நன்பகல் 2.30 மணிக்கு ஆஜராகவேண்டும் என காவ்யா மாதவனிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.