ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் அண்ணன் “ராம்னிக் பாய்”காலமானார்.
“ரிலையன்ஸ்” இந்த பெயர் அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் ஒரு நிறுவனம் ஆகும் இன்று நம் வீட்டில் உபயோக படுத்தும் எதோ ஒரு பொருளில் ஏதோ ஒன்று ரிலையன்ஸ் என்ற மாபெரும் நிறுவனத்தின் பொருளாக தான் இருக்கும்.
இன்று இவர்கள் இல்லாத துறையை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம் அப்படி ஒரு மாபெரும் வளர்ச்சி, எல்லோரும் சர்வ சாதரணமாக சொல்லி விடுவார்கள் அவர்களுக்கு அரசியல் பலம் உள்ளது அனைத்தையும் சாதித்து விடுவார்கள் என்று மீம்ஸ் போடுவார்கள் அப்படி மீம்ஸ் போடுபவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் ரிலையன்ஸ் கொடுத்த இன்டர்நெட் மூலமாகத்தான் அந்த மீம்ஸ்ஸை பதிவிட்டு கொண்டு இருப்பார்கள்.
அப்படி அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை திருபாய் அம்பானி என்ற ஒரு மனிதரால் செய்து முடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, அவருக்கு உறுதுணையாக இருந்தவர்தான் அவரின் அண்ணன் “ராம்னிக் பாய்.
நிறைய பேருக்கு அம்பானியை தெரிந்த அளவுக்கு அவர் அண்ணனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் விக்கிபீடியாவில் தேடினாலும் அவரை பற்றி தகவல் இல்லை இவர் அம்பானியின் ரிலையன்ஸ் உருவாக பக்க பலமாக இருந்தவர் அதனால்தான் இவருக்கு 90 வயது வரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர்களில் ஒருவராக பதவியில் இருந்தார் வயது மூப்பின் காரணமாக அந்த பதவியில் இருந்து விலகினார்.
95 வயதான “ராம்னிக்பாய்” அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் காலமானார். ராம்னிக்பாய்க்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர், ஏற்கனவே அவரின் மனைவி 2001 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.