Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

மலிவு விலையில் மருத்துவமனை, உணவகம், மருந்தகம் நடத்திய சமூக சேவகர் சுப்பிரமணியம் மறைவு-பொதுமக்கள் அஞ்சலி

December 11, 2020

மலிவு விலையில் மருத்துவமனை, உணவகம், மருந்தகம் உள்ளி்ட்ட பல்வேறு சேவைகளை நடத்திய சமூக சேவகர் சுப்பிரமணியம் காலமானார். அவரது மறைவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சமூக சேவகர்
கோவை – திருச்சி சாலையில், சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் அறங்காவலராக சுப்பிரமணியம் என்பவர் செயல்பட்டு வந்தார். 1972-ம் ஆண்டு சுப்பிரமணியம் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இயந்திர உதிரி பாகங்களைத் தயாரித்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தார். மலிவு விலை மருத்துவமனை, உணவகம் பின்னர், கடந்த 1996-ம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பை சுப்பிரமணியம் தொடங்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்து வந்தார். கோவை, சிங்காநல்லூர் அருகே செயல்பட்டு வந்த சாந்தி சோஷியல் சர்வீஸ் மையத்தில், மருத்துவ மையம், மலிவு விலை மருந்தகம், உணவகம் ஆகியவை செயல்பட்டு வந்தன. சாந்தி கியர்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாந்தி சோஷியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

பெரும் சோகத்தில் தமிழகம்… நடிகர் விவேக் காலமானார்…

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் புதிய வேலைகள் 2021

சத்தம் இல்லாமல் சாதிக்கும் ரியல் ஹீரோ…

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கமின்றி நடத்தி, சேவை மனப்பான்மையுடன் சுப்பிரமணியம் செயல்பட்டு வந்தார். மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

மருத்துவர் கட்டணம், உணவுக்கட்டணம்
இவரது உணவகத்தில் சாப்பாடு ரூபாய் 10 மற்றும் ரூபாய் 5க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய் ஆகும். வெளிவிலையை விட இங்குள்ள மருத்தகங்களில் 20 சதவீதம் குறைந்த விலையில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இங்கேயே மருத்துவ ஆலோசனை பெறவும், பரிசோதனைகள் செய்யவும், மருந்துகள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்புக்குச் சொந்தமாக பெட்ரோல் பங்க் அருகே செயல்பட்டு வருகிறது. ஸ்டாக் வரும்போது பெட்ரோல் என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும்வரை இங்கு விற்பனை செய்யப்படும்.

சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்புக்குச் சொந்தமாக பெட்ரோல் பங்க் அருகே செயல்பட்டு வருகிறது. ஸ்டாக் வரும்போது பெட்ரோல் என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும்வரை இங்கு விற்பனை செய்யப்படும்.
முகம்காட்டாதவர்
சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின் மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊடகங்களில் முகத்தைக் காட்டுவதில்லை என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்தவர் சுப்பிரமணியம். 78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.

பொதுமக்கள் அஞ்சலி
அவர் செய்த சேவைகளாலும், உதவிகளாலும் கோவை மக்கள் அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையையும் வைத்திருந்தனர். அவரது உடல் சாந்தி சோஷியல் சர்வீஸ் மையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சுப்பிரமணியத்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

100 சதவீதம் காங்கிரசை விட்டு விலகுவேன்-புதுச்சேரி எம்.எல்.ஏ. ஜான்குமார் பேட்டி

Next Post

அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு: மார்க்சிஸ்ட் புதிய அறிவிப்பு!

Next Post

அதானி, அம்பானி பொருட்கள் புறக்கணிப்பு: மார்க்சிஸ்ட் புதிய அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version