இன்று உத்தரகண்ட் மாநிலம் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா – பெருமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
டெல்லி , உத்தரகண்ட் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழ்ந்து உள்ளது.ஹரிதுவார் ,உத்தம்சிங் நகர்,உத்தரகாசி ,ருத்ரபிரயாக்,சமோலி,பித்தோராகார்க்,பாகேஷ்வர்,அல்மோரா,நய்னிதால், டேராடுன், பவ்ரி,சம்பாவத்,தெரி கர்வால் ஆகிய இடங்களில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளத்தால் அடித்தும் சொல்லப்பட்டுள்ளது. நேற்று மாலை, உத்தரகண்ட் முதலமைச்சர் உயர் அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி, மாநிலத்தில் சூழல் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் இருந்து உத்தரகண்ட் செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிகத்தின் முதலமைச்சர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மாநிலத்தின் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிவார்.
பின்னர், நாளை ஹெலிகாப்டர் மூலம் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளையும், மழையால் ஏற்பட்ட பாதிப்பையும் பார்வையிடுவார். உத்தரகண்ட் மாநிலத்தை விட தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவும் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உத்தரகண்ட் மாநிலம் பாஜக ஆளும் மாநிலம் என்பதாலும் விரைவில் தேர்தலை சந்திக்க இருப்பதாலும் மத்திய அரசு உத்தரகண்ட் மாநிலத்திற்கு முக்கியதும் கொடுக்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.