
இந்தியாவின் ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு பகிர்ந்துகொண்ட ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார், கடந்த 3 ஆண்டுகளாக ராணுவத்தின் இணைந்தார். ராஜஸ்தான் மாநிலப் பிரிவில் பணியாற்றி வந்த அவர், சமூகவலைதளம் மூலமாக பழகி வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண்ணும் ராணுவம் குறித்து ஆர்வம் தெரிவித்ததால், இந்திய ராணுவம் குறித்த தகவல்களை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சக ஊழியருக்கு தெரியவந்ததை அடுத்து, காவல்துறைக்கு அவர்கள் புகார் செய்தனர்.
கடந்த சில நாட்களாக பிரதீப்பின் செயல்பாடுகளை கவனித்து வந்த காவல்துறை, அந்த 18-ம் தேதி ராணுவம் குறித்த தகவல்களை பிரதீப் வெளியில் பகிர்ந்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
அவருடைய கைப்பேசியை வைத்து விசாரித்த போது, பெங்களூருவில் செவிலியராக பணியாற்றும் பெண்ணுக்கு அவர் தகவல்களை தெரிவித்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளி என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் பிரதீப் குமார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இதுதொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.