சர்வதேச எல்லையில் காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர்.

ஸ்ரீநகர்:
காஷ்மீர் கதுவா மாவட்டதிலுள்ள ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டி கடந்த சில நாட்களாக எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பயங்கரவாதிகள் கட்டிய சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். அந்த சுரங்கபாதையானது 150 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்ததாகவும், போமியான் கிராமத்தில் தொடங்கிய இந்த பாதை மறுமுனையில் பாகிஸ்தானில் சென்றடைகிறது.
இதுகுறித்து, எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ஜம்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சம்பா, கதுவா மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 3-வது சுரங்கப்பாதை ஆகும். சுரங்கப்பாதை கட்ட பயன்படுத்திய மணல் மூட்டையில் பாகிஸ்தான் குறியீடுகள் இருந்ததாகவும், பாகிஸ்தான் அமைப்புகளின் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது .
Read more – சிம்புவிற்கு இனிமேல் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படாது : தயாரிப்பாளர் சங்கம் முடிவு
மணல் மூட்டைகளில் தயாரிப்பு ஆண்டு 2016-2017 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் மறுமுனையானது பாகிஸ்தானின் ஷாகேர்கர் பகுதியாகும். அந்த பகுதியானது பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்களுக்கும், தளங்களுக்கும் பெயர் பெற்றது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது, பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பில்லை என்றும், கடந்த காலத்தில் இதன் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவினார்களா என்பது குறித்து விசாரணைக்கு பிறகு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.




