விடுபட்ட தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்-தேர்தல் ஆணையம்…

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் மக்கள் நலன் கருதி தற்போது தமிழகம், பீஹார்,உத்தரப் பிரதேசம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 2-வது வாரம் வரை தேர்தல் நடத்த இயலாது. அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, விரைவில் காலியாக உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷேபள்ளி சரண் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இடைத்தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.