2025-26 சந்தைப் பருவத்தில் பணப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டு சந்தைப் பருவத்தில் 14 பணப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான காரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட அதிகபட்ச முழுமையான குறைந்தபட்ச ஆதரவு அதிகரிப்பு காட்டு எள்ளு விதை (குவிண்டாலுக்கு ரூ.820), ராகி (குவிண்டாலுக்கு ரூ.596), பருத்தி (குவிண்டாலுக்கு ரூ.589), எள் (குவிண்டாலுக்கு ரூ.579) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செலவு என்பது பணிக்கு அமர்த்தப்பட்ட மனித உழைப்பு, காளை மாடுகளின் உழைப்பு / இயந்திர உழைப்பு, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கு செலுத்தப்படும் வாடகை, விதைகள், உரங்கள் போன்ற பொருள் உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்கான செலவுகள், நீர்ப்பாசனக் கட்டணங்கள், கருவிகள் மற்றும் பண்ணை கட்டிடங்களின் மீதான தேய்மானம், பணி மூலதனத்தின் மீதான வட்டி, பம்ப் செட்களை இயக்குவதற்கான டீசல்/மின்சாரம், இதர செலவுகள் மற்றும் குடும்ப உழைப்பின் கணக்கிடப்பட்ட மதிப்பு போன்ற அனைத்து செலுத்தப்பட்ட செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.
நெல் (கிரேடு ஏ), சோளம் (மால்தண்டி) மற்றும் பருத்தி (நீண்ட தானியம்) ஆகியவற்றுக்கான செலவுத் தரவுகள் தனித்தனியாக தொகுக்கப்படவில்லை
2025-26 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான பணப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான 2018-19 மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்கு ஏற்ப உள்ளது. கம்பு (63%), அதைத் தொடர்ந்து மக்காச்சோளம் (59%), துவரம் பருப்பு (59%) மற்றும் உளுந்து (53%) ஆகியவற்றில் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செலவை விட எதிர்பார்க்கப்படும் லாப வரம்பு மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி செலவை விட லாப வரம்பு 50% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.