பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கத்தியார் உள்பட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியேரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக. 31க்குள் விசாரணையை முடிக்க அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக பேசியுள்ள சிபிஐ வழக்கறிஞர் லலித் சிங், பாபர் மசூதி இடிப்பின் அனைத்து விசாரணைகளும் செப்டம்பர் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதத் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 351 சாட்சிகளும், 600க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களைளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது என கூறினார்.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது