உலகம் முழுவதையும் புரட்டிப்போட்டு கொண்டு இருக்கும் கொரோனாவுக்கு இன்று வரை மருந்து கண்டு பிடிக்க படவில்லை அனைத்து உலக நாடுகளும் மருந்து தயாரிப்பதில் முழு வீச்சில் முனைப்பு காட்டிவருகின்றனர்.
ஆனால் கர்நாடகவாவை சேர்ந்த ஒரு கவுன்சிலர் சொன்ன ஒரு மருத்தவ முறையால் அனைவரும் வியப்படைத்துள்ளனர்.
கர்நாடகாவின் மங்களூருக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட “உள்ளால்” என்ற இடத்தின் வார்டு கவுன்சிலரான ரவிச்சந்திர காட்டி உள்ளார். இவர் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு வழிமுறைதான் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக உள்ளது.
அவர் சொன்ன முறையானது , 90 மி. லி. ரம், பொறித்த முட்டையுடன் சிறிதளவு மிளகு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கொரோனா நோயை கட்டுப்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த மக்கள் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.