முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வெளியில் சென்று வந்தாலே பெரிய தவறு என்று மக்கள் மனதில் பதிய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தொற்றிற்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இதன் பாதிப்பு சென்னையில் தான் கட்டுக்கடங்காமல் சென்றுவருகிறது. இந்தநிலையில், தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையும் நடத்திவருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொது வெளியில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.

இத்தகைய சூழலில் கொரோனாவினை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு என்பது முக்கியமான ஒன்றாகவுள்ள நிலையில், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வெளியில் சென்று வந்தாலே பெரிய தவறு என்று மக்கள் மனதில் பதிய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.