கொரோனா தொற்றைத் தடுக்க விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.

புதுடெல்லி:
பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்தபிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,அப்பொழுது அவர் கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.




