உலகின் மிக நீண்ட பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து இலண்டனுக்குப் பயணிக்க வேண்டுமானால் மக்கள் விமானம் அல்லது அரிதாக நீர்வழிகள் பற்றி நினைக்கிறார்கள். இருப்பினும், டெல்லியில் இருந்து இலண்டனுக்கு பஸ் பயணம் செய்வதை அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க மாட்டார்கள்.
இந்திய சுதந்திரத்தின் 74 வது ஆண்டை முன்னிட்டு, அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற பயண நிறுவனம் டெல்லியில் இருந்து இலண்டனுக்கு பேருந்து பயணத்தை அறிவித்தது. நிறுவனம் இந்த பயணத்திற்கு “பஸ் டு இலண்டன்” என்று பெயரிட்டது
இது உலகின் மிக நீண்ட பஸ் பயணமாக இருக்கும். இந்த பஸ் மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், சீனா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் வழியாக பயணிக்கும். இந்த பஸ் 20 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து 70 நாட்களில் சென்றடையும்.
இப்போது மிக முக்கியமான பகுதிக்கு வருவோம் – செலவு. டெல்லியில் இருந்து லண்டன் வரை முழு பயணத்தை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் ஒரு நபருக்கு 15 லட்சம் செலவுசெய்ய வேண்டும். ஆம், இதுபோன்ற அனுபவங்கள் இது போன்ற ஒரு பிரைஸ் டாக் உடன் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! மறுபுறம், நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் உங்கள் பயணத்தை திட்டமிட்டு தேர்வு செய்தால் ஒரு நபரின் விலை ரூ .3.5 லட்சம் முதல் ரூ .4.95 லட்சம் வரை இருக்கும்.
மே 2021 இல் லண்டனுக்கு முதல் பஸ் பயணம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.