300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம் இருப்பதால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி ஆணையருக்கு வேண்டுகோள்
பல ஆக்சன்ச்சர் ஊழியர்கள் கொடுத்த புகார்களின் பேரில், NITES மற்றும் மஹாராஷ்ட்ரிய IT ஊழியர் சங்கம் புனே ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் வழங்கியது. இதில் ஆக்சன்ச்சர் புனே கிளையில் 300 ஊழியர்களை பெஞ்சில் வைத்திருப்பதாகவும் இதனால் அவர்கள் வேலைக்கு ஆபத்து என்றும் தெரிவித்திருக்கிறது.
கொரோனா காலத்தில் நஷ்டத்தை சரி செய்ய நிர்வாகம் எடுத்த இந்த முடிவை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்சன்ச்சர் தரப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் செயல்திறன் மேலாண்மை முறையின்படி எடுக்கப்பட்ட முடிவு என்றும், குறைந்த செயல்திறன் கொண்ட 5% ஊழியர்களை நீக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆக்சன்ச்சர் நிறுவனத்தின் மொத்த 5 லட்சம் ஊழியர்களில் 2 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதால், 5% என்பது 10,000 இந்திய ஊழியர்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




