நீட் தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு, அக்டோபர் 14-ஆம் தேதி (நாளை மறுநாள்) மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் போதிய போக்குவரத்து வசதி இல்லாதக் காரணத்தால், பல மாணவர்களுக்கு தேர்வினை எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், நீட் தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீட் தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு, அக்டோபர் 14-ஆம் தேதி (நாளை மறுநாள்) மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனவும், மேலும் தேர்வுகளுக்கான முடிவுகளை அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிட வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




