
வகுப்பறைக்குள் தேர்வு நடந்துக் கொண்டிருந்தபோது மின்வசிறி கழண்டு மாணவி மீது விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் 10-ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து வருகிறது. அங்குள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் தேர்வு நடந்தது. வகுப்பறைக்குள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது எதிர்பாராதவிதமாக மேற்கூரையில் இருந்த மின்விசிறி கழண்டு விழுந்தது.
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அரசு மருத்துவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு மாணவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து மாணவி மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். தற்போது அந்த மாணவி நலமுடன் இருப்பதாகவும் அடுத்தடுத்து நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்க அவர் ஆர்வமுடன் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.