விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தில் பேரணி நடக்கும் என்று விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளின் போராட்டதை முடிவு கொண்டுவர கடந்த 30 ம் தேதி விவசாய அமைப்பினருடன் 6 ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சார்பில் மத்திய அரசுக்கு 4 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனர். அதில் 2 அம்ச கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், குறைந்த பட்ச ஆதரவில்லை மற்றும் 3 வேளாண் மசோதாக்கள் தொடர்பான அம்சங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக வரும் 4 ம் தேதி மீண்டும் விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
Read more – டிரம்பின் பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் : சீனா நம்பிக்கை
இந்தநிலையில், 4 ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என மத்திய அரசுக்கு விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரிவிக்கையில், ஜனவரி 6 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை இந்தியாவில் பல இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.மேலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 23 ம் தேதி நடத்தப்படும் என்றும் ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.