இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பை கிளப்பில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மும்பை :
மும்பை விமான நிலையம் அருகே டிராகன் ஃபிளை என்ற கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை மும்பை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிளப்பில் பணியாற்றும் ஊழியர்கள் 7 பேர் உட்பட 34 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இதில் சுரேஷ் ரெய்னா, பிரபல பாடகர் குரு ரந்தவா, பாலிவுட் பிரபலம் சுசானே கான் ஆகியோர் மீது சட்ட பிரிவு 188(அரசு அறிவித்த உத்தரவை மீறல்) 269, ஐபிசி 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
Read more – தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் : தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா உறுதி
தற்போது புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மகாராஷ்டிரா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாகக் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் கொரோனா தடுப்ப விதிகளை மீறியதாக சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி அந்த கிளப் இயங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சுரேஷ் ரெய்னா மற்றும் கைதான பாலிவுட் பிரபலம் சுசானே கான் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.