சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் பாஜக மூத்த தலைவருமானவர் ராஜேந்திர பால்சிங் பாட்டியா. இவர் குஜ்ஜி தொகுதியில் இருந்து 3 முறை மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

இந்த நிலையில், ராஜேந்திர பால்சிங் பாட்டியா தங்கியிருந்த அறைக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, கதவை திறந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தனது அறையில் தூக்கில் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




