சூதாட்ட விவகாரத்தில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள paytm செயலி, பணப்பறி மாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில் முக்கிய பன்ஹக்கு வகித்து வருகிறது. அதேசமயம், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தம் மூலம், அதில் விளையாடி வெல்லும் பணத்தை வாடிக்கையாளர்கள் நேரடியாக paytm கணக்கில் பெற முடியும். இதன் காரணமாகவும் இதற்கான வாடிக்கையாளர்கள் அதிகம் என்று கூறலாம்.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் ‘இந்தியாவில் விளையாட்டு சூதாட்டக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் வலைதளப்பதிவை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் சூதாட்டத்தை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் பயன்பாடுகள் தொடர்பான சிக்கல்களை இது எடுத்துக்காட்டுகிறது.
கூகுள் பிளே எங்கள் நுகர்வோருக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் டெவலப்பர்களுக்கு நிலையான வணிகங்களை உருவாக்க தேவையான தளத்தையும் கருவிகளையும் வழங்குகிறது. எங்கள் உலகளாவிய கொள்கைகள் எப்போதுமே அந்த இலக்கை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன, எங்கள் அனைத்து பங்குதாரர்களின் நன்மையையும் கருத்தில் கொண்டு கூகுள் தனது வலைப்பதிவில் கூறியுள்ளது.
தொடர்ந்து, கூகுள் பிளே ஸ்டோர் ஆன்லைன் சூதாட்ட விதிகளை அனுமதிக்க மாட்டோம். விளையாட்டு பந்தயங்களை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம். ஒரு பயன்பாடு நுகர்வோரை வெளிப்புற வலைத்தளத்திற்கு இட்டுச் சென்றால், உண்மையான பணம் அல்லது பணப் பரிசுகளை வெல்ல கட்டண போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்’ என்று கூகுளின் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை துணைத் தலைவர் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, paytm செயலியை நீக்கி உள்ளதோடு நாங்கள் ஆன்லைன் சூதாட்ட விதிகளை அனுமதிக்க மாட்டோம் அல்லது விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்கமாட்டோம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து Paytm எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான Paytm ஐ பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் Paytm For Business, Paytm Money, Paytm Mall பிற செயலிகள் அனைத்தும் Play Store இல் இன்னும் உள்ளன. ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் Paytm பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இந்தியாவில் கூகிள் பேவுடன் போட்டியிடும் அதன் மார்க்கீ செயலி சமீபத்தில் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது குறிபிடத்தக்கது.