ஐஐடி மாணவர் சேர்க்கையிற்கு இந்தாண்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் தேவையில்லை என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனமாக ஐஐடியில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் JEE தேர்வில் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும், அதே போல் பிளஸ் 2 ல் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்தாண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருதி இந்தாண்டு மட்டும் ஐஐடியில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, பிளஸ் 2 மதிப்பெண்களை கருத்தில் கொள்ளவில்லை எனவும், ஆனால் அதே சமயம் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் JEE தேர்வின் தகுதியினை மட்டுமே எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.