ஜெ.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
ஜெ.இ.இ மெயின் தேர்வு 2வது அமர்வு ஜூலை 25 மற்றும் ஜூலை 30ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் காணலாம். 24 பேர் 100% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 5 தேர்வர்களின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.
தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ சென்று தெரிந்து கொள்ளலாம்.