ராஜஸ்தான் மாநிலத்தில் 21 நாள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனையுடன் சட்டசபையினை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மாநிலத்தின் அரசியல் குழப்பம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தநிலையில தான் கொறாடா உத்தரவினை மீறும் வகையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவ எம்.எல்.ஏகள் 18 பேரும் சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்த்தினை புறக்கணித்தனர் இதனையடுத்து சபாநாயகர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பிஇருந்தார்.
இதற்கு எதிராக சச்சின் பைலட் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் நீதிமன்றம், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த 24-ந் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையினை இழந்து விட்டதாக பாஜக கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர்.

எனவே சட்டசபையில் தங்களது மெஜாரிட்டியை நிரூப்பிக்கும் வகையில் சட்டசபையினை கூட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் கவர்னர் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் கவர்னர் நிராகரித்ததையடுத்து மீண்டும் 2 வது முறையாக முதல்வர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு கோரிக்கை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது சட்டசபையினை கூட்ட தயார் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதிலிளத்துள்ளார்.
சட்டசபை கூடுவதற்கு கவர்னரின் நிபந்தனைகள்:
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட்டின் கோரிக்கைய ஏற்ற கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, “சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால், அந்த கூட்டம் அரசுக்கு உள்ள மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கூட்டப்படுகிறதா? என்பது பற்றி அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் சட்டசபையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால், சபையில் நடைபெறும் ஓட்டெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். மேலும் சட்டசபையை கூட்டுவதற்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பவேண்டும் எனவும் அதோடு கூட்டத்தில் தனிமனித இடைவெளியினை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.