நமது அன்றாடத் தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலிய துறை பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து கொண்டு இருந்தது.
முதலில் மாதம் ஒருமுறை பிறகு கச்சா எண்ணெய் விலையை பொறுத்து விலை ஏற்றம் மற்றும் விலை குறைப்பு இருந்தது.பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
அதன் படி இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நிலவரத்தை பார்க்கலாம். இன்று காலை மாற்றி அமைக்க பட்ட விலையின்படி, பெட்ரோல் 1 லிட்டர் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 83.63 பைசாவுக்கும், டீசல் விலையை பொறுத்தவரை, நேற்றைய விலையான 78ரூபாய் 86 பைசா என்ற விலையில் விற்கப்படுகிறது.