இந்தியாவிலேயே முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் வேகம் குறைய தொடங்கினாலும், பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காணொலி மூலமாகவே நீதிமன்றங்கள் வழக்கை விசாரித்த வருகின்றன.
அதன், அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைகள் யூட்யூப் தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.
இதன் மூலம், நீதிமன்றத்தின் மீதான நம்பகதன்மை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.




