டெல்லி ரோஹினி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது இந்தியாவையே உலுக்கியுள்ளது.

ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி ஜிதேந்தர் கோகி என்பவருடன் மேலும் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இருதரப்பினருக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.




