நெட்பிளிக்சில் வெளியாகியுள்ள குஞ்சன் சக்சேனா- தி கார்கில் கேர்ள் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..!

கார்கில் போரை காட்சியாக சித்தரிக்கும் வகையில் வெளியான ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் சென்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி நெட்பிலிக்சில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் இந்திய விமானப் படையை (IAF) மோசமாகவும் கேவலமாக சித்தரித்து உள்ளதாகவும், இதில்விமானப்படையில் பாலியல் பாகுபாடு இருப்பது போல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளதாகும் குற்றம் சாட்டி உள்ளார்கள். எனவே, இந்த திரைப்படத்திற்கு தடைவிதிக்குமாறு மத்திய அரசு சார்பில் மனு தாக்கலாகி உள்ளது.
இதில் இந்திய விமானப்படை (IAF) குறித்து படத்தில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்ற அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12’ஆம் தேதி OTT தளங்கள் மூலம் நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ராஜீவ் ஷக்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது விசாரணையில், இந்த மனுவை நீங்கள் ஏன் ஓடிடி மேடையில் படம் வெளியாவதற்கு முன்பு நீதிமன்றத்தை அணுகவில்லை என்று வினாஎழுப்பியுள்ளார். மேலும், இந்த திரைப்படம் ஏற்கனவே வெளியாகி விட்டதால் இப்போது தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் மத்திய அரசை முன் முன்னிறுத்தி வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், “இந்த படம் IAF குறித்து மோசமான எண்ணத்தை விதைக்கும் வகையில் பாலின சார்பில் உள்ளது என்று காட்டியுள்ளது. அது தவறானது.” என வாதம் செய்தார். இந்த படத்தை வெளியிட்ட ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டும் பதில் கூறி உள்ளது.

அனைத்தையும் விசாரித்த நீதிபதி இந்த வழக்கில்விமான லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனாவும் வழக்கில் ஒரு வாதியாக மாற்றப்பட வேண்டும் என்றும், அவரின் பதிலைக் கேட்க அவருக்கு வழக்கு ஆவணம்அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




