டெல்லி அருகே நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சூப்பர் டெக் என்ற இரட்டை மாடி கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர்டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது.இதில் அபெக் என்ற கோபுரம் 32 மாடிகளை கொண்டது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது 31 மாடிகளையும், 318 அடியையும் கொண்டது. இந்த இரட்டை கோபுரங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் கட்டுமானம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாகவும், புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் நிரூபணமானது. இதையடுத்து கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து 3200 கிலோ வெடிமருந்துகளை பயன்படுத்தி ’நீர்வீழ்ச்சி வெடிப்பு’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் தகர்க்கப்பட்டது. இந்த பணிக்காக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் 55,000 டன் இடிபாடுகள் குவியும் என்று இதனை அகற்ற 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இதன் மதிப்பு (இடிப்பதற்கு) 20 கோடி என்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.