‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் பிரதமர் பள்ளி திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
புதிய கல்விக்கொள்கையின் கீழ் இயங்க உள்ள ‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் வளரும் இந்தியாவுக்கான பிரதமர் பள்ளி திட்டத்திற்கு ₹27,360 கோடி செலவாகும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. இதில், ₹18,128 கோடியை மத்திய அரசு அளிக்கும். மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் பங்கிட்டு கொள்ள வேண்டும். முதற்கட்டமாக, கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 14,500 பள்ளிகளை இத்திட்டத்தில் சேர்க்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.