ஐதராபாத் நிஜாமின் மனைவிகளில் ஒருவரான கதேரா பேகம் சாஹோபாவின் மகளான சஹோப்ஸாதி பஷீர் உன்னிசா பேகம் (93) வயது மூப்பு காரணமாக காலமானார்.

ஐதராபாத்தின் ஏழாவது “நிஜாம் நவாப் மிர் ஒஸ்மான் அலிகான் பகதூர்” இவருக்கு 18 மகன்களும் 16 மகள்களும் இருந்தனர். நிஜாமின் மனைவிகளில் ஒருவரான கதேரா பேகம் சாஹோபாவின் மகளான சஹோப்ஸாதி பஷீர் உன்னிசா பேகம் (93) வயது மூப்பு காரணமாக காலமானார்.
1927 ம் ஆண்டில் பிறந்த உன்னிசா பேகம் காசிம் நாவஸ் ஜங்அலிபாஷா என்பவரை மணந்தார். இவர் கடந்த 1998-ம் ஆண்டு காலமானார். இவர்களது ஒரே மகள் சாஹே ப்ஸாதி ரஷீத் உன்னிசா பேகம், நிஜாம் அருங்காட்சிய வளாகத்தில் குடியிருந்து வருகிறார்.
சஹோப்ஸாதி பஷீர் உன்னிசா பேகம் மறைவு குறித்து நிஜாமின் பேரன்களில் ஒருவரும், நிஜாம் குடும்ப நல சங்கத்தின் தலைவருமான நவாப் ஜவாப் அலிகான், தனது அத்தையை பற்றி கூறுகையில், குடும்பத்தில் அனைவரின் நலன்களை பற்றி அக்கறை கொண்டிருந்தார். அரச குடும்பத்தில் இருந்தாலும் ஒரு சாதாரண வாழ்க்கையே வாழ்ந்தார் என குறிப்பிட்டார்.