இளம்பெண் ஒருவர் தனது மாமியாரை அடித்து துன்புறுத்தியதால் பரபரப்பு.
ஹைதாராபாத் நகரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தெருவில் வைத்துத் தனது மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடித்துக் கொடுமை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
ஹைதராபாத்தில் மல்லேபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த உஜ்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மாமியாருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது எனவே உஜ்மா, மாமியாரும் ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் அளித்துக்கொண்டனர்.
மேலும் உஜ்மானி கணவர் 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் உள்ளதால் அவரோடு பேசவிடாமல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் உஜ்மா தனது மாமியாரை தெருவில் வைத்துத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.